கால்பந்து போட்டியில் கலக்கும் நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக்..!

Scroll Down To Discover

நடிகர் அஜித்தின் மகன் தற்போது கால்பந்து விளையாட்டிற்க்காக பயிற்சி செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித், இவர் தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக இருக்கிறார்.

இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் (அனோஷ்கா) மற்றும் ஒரு மகன் (ஆத்விக்) உள்ளனர்.

மேலும், இவர் பல திறமைகளை கொண்டுள்ளார். தற்போது இவர் தனது உலக பைக் டூரை ஆரம்பித்து அதில், அதிக தீவிரம் செலுத்தி வருகிறார்.இவரை போலவே தற்போது இவரது மகன் கால்பந்து விளையாட்டில் அசத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து, அஜித்தின் மகன் ஆத்விக் சென்னையின் எஃப்சி அணியில் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதில் ஷாலினி மற்றும் அஜித்துடன் தனித்தனியே கால்பந்தாட்ட மைதானத்துக்கு ஆத்விக் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வந்தன.மேலும், அவர் தற்போது தாறுமாறாக கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதனால் ரசிகர்கள் குட்டி ரொனால்டோ மாதிரி குட்டி தல விளையாடுறாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.