காற்று மாசு அதிகரிப்பு – டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிப்பு..!

Scroll Down To Discover

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர்.

இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.