கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி – தமிழ்நாட்டுக்கும் தனி இடத்தைப் பெற்றுத்தரும்..!

Scroll Down To Discover

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கிய நிலையில், கார் பந்தயம் தொடங்கியுள்ளது.எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கியது.முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.

https://twitter.com/Udhaystalin/status/1829903197126713686

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற #Formula4Chennai Racing on the Street Circuit-ஐ சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி – முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் – கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.

முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் – தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகமே வியக்கிற வகையில் #Formula4Chennai Racing on the Street Circuit போட்டி தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியை, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு நடமாடும் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ள 100 மாணவ – மாணவியர் நேரில் காண ஏற்பாடு செய்திருந்தோம். புது வரலாறு படைக்கும் வகையில் நடைபெறும் இந்த ஃபார்முலா 4 போட்டியை கண்டு ரசித்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்தும், அன்பும்.