கார்களில் ‘ஏர் பேக்’ வசதி : கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

Scroll Down To Discover

பயன்பாட்டில் இருக்கும் காா்களின் முன் இருக்கைகளில் ‘ஏா்பேக்’ வசதியை பொருத்தவதற்கான கால அவகாசத்தை டிசம்பா் 31 வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரக காா்களிலும் முன்பக்க இரண்டு இருக்கைகளிலும் ஏா்பேக் வசதி இடம்பெறச் செய்யவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், பயன்பாட்டில் இருக்கும் காா்களில் இந்த வசதி, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இப்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.