கார்களில் ஏர் பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு

Scroll Down To Discover

காரின் ஓட்டுநர் இருக்கைக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஓட்டுநருக்கு மட்டும் ஏர் பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் விபத்தின் போது முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் படுகாயமடையவும் உயிரிழக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதனால் கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள், ஏர்-பேக்-ஐ பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனக் கூறப்படுகிறது.