காதலால் விபரீதம் : காதலியுடன் ஃபோனில் பேசியபடி கிணற்றில் விழுந்த இளைஞர் : மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Scroll Down To Discover

திருவாரூரில் இரவு நேரத்தில் காதலியுடன் பேச தனியாக சென்ற இளைஞர் மறுநாள் காலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது

திருவாரூரைச் சேர்ந்த ஆஷிக், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் இரவில் தான் பணிபுரியும் நூற்பாலையின் அருகேயிருக்கும் கிணற்று பகுதியில் இருந்து காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இருளில் நடந்தபடி போனில் பேசியபோது சுற்றுச்சுவர் இல்லாத தரைகிணற்றில் விழுந்துள்ளார்.

அவர் காப்பாற்றக்கோரி சத்தம் போட்டும் யாருக்கும் அது கேட்கவில்லை. சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகே அதாவது விடிந்தபிறகே அவர் கிணற்றில் தத்தளிக்கும் தகவல் தெரிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் கயிறு கட்டி கிணற்றில் போராடிக் கொண்டி இளைஞரை மீட்டனர். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.