தோட்டத்தில் கள்ள நோட்டு தயாரிப்பு : நண்பர் இறந்ததால் சிக்கிய நபர்..!

Scroll Down To Discover

Madurai -RaviChandran


மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில், அங்கு சென்று பார்த்தபோது பாண்டி என்பவருக்கு, சொந்தமான தோட்டத்தில் இளங்கோ முகவரி மற்ற விவரம் எதுவும் தெரியாத என்பவர் இறந்து கிடந்துள்ளார்.

Video LINK:-

https://youtu.be/dJJPGRWLwjY

 

இது சம்பந்தமாக சாப்டூர் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தை சோதனை செய்தபோது, சம்பவ இடத்தில் ரூபாய் 11,64,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளும் அவற்றினை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அச்சடிக்கும் இயந்திரங்கள், மை போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், மேற்படி பொருட்களை கைப்பற்றிய காவல் நிலைய அதிகாரிகள் மேற்படி இடத்திற்கு சொந்தக்காரரான பாண்டி என்பவரை விசாரணை செய்ய அவர் தானும் மேற்படி இறந்த இளங்கோ என்பவரும் சேர்ந்து கள்ளநோட்டு அச்சு அடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், இவ்வழக்கில் தொடர்புடைய பாண்டியை கைது செய்து காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் ,இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், உத்தரவின்பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா, தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.