கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் : துணை தாசில்தார் பட்டியல் வெளியிடு.!

Scroll Down To Discover

மதுரையில் இரவு முழுவதும் நடத்திய போராட்டத்தை அடுத்து 23 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர்.

அரசு வருவாய் துறையில் குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் தகுதியானவர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க கோரினர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படாததால் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன் 23 பேரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் போராட்டம் நடந்த நிலையில் பதவி உயர்வு வழங்குவதாக கலெக்டர் டி.ஜி. வினய். டி ஆர்.ஓ. செல்வராஜ் உறுதியளித்ததன் பேரில் 23 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பட்டியலை வழங்கியதை அடுத்து கலெக்டருக்கு சங்க நிர்வாகிகள் கிஷோர், பிரேம், சஞ்சய்உட்பட நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்