கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியை வழங்கக்கோரி, கரும்பு விவசாயிகள் சங்கங்கள் தொடர் போராட்டம்.!

Scroll Down To Discover

hr>மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசீய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகமானது உடனடியாக வழங்கக் கோரி, ஆலை முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரும்பு விவசாயிகளுக்கு பாக்கித் தொகை ரூ. 19 கோடியே 90 லட்சத்தை உடனடியாக வழங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், உசிலம்பட்டி தாலூகா விவசாயிகள் சங்கம், சர்க்கரை ஆலை அனைத்துத் துறை அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.அய்யூர் அப்பாஸ், மேலூர் கதிரேசன், நல்லமணி காந்தி, மொக்கைமாயன், ஊராட்சி மன்றத் தலைவர் ரமேசன் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.