கன்யான் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 9,023 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
ககன்யான் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 9,023 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், ககன்யாத் திட்டம் என்பது சந்திரனுக்கு மனிதனை அனுப்பி பாதுகாப்பாக திரும்பி வருவதற்கானதாகும். அதற்கான செலுத்து வாகனம், உயிர்காக்கும் திட்டமுறை, தப்பிப்பதற்கான முறை, பயிற்சி மற்றும் மீட்பு ஆகியவற்றுக்கான உள்நாட்டு தொழில்நுட்பங்களை இஸ்ரோ வடிவமைத்து வருவதாகக் கூறினார். நாட்டில் விண் வெளித்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
Leave your comments here...