கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா.! குடியரசு தலைவர், பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவருடன் கேந்திர நிர்வாகிகள் சந்திப்பு..!!

Scroll Down To Discover

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள  சுவாமி விவேகானந்தர் தியானம் பாறையில் இருந்ததை நினைவு கூறும் வகையில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 50 ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டை பொன் விழா ஆண்டாக விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இதனை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள், டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து நினைவுபரிசு வழங்கினர்.

அதன்பிறகு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், இணை பொதுச்செயலாளர்கள் பிரவின்தபோல்கர், கிஷோர், ரேகாதவே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தனர். இதனை நினைவு படுத்தும் விதமாக அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டப படத்தை நினைவு பரிசாக வழங்கினர். மேலும் விவேகானந்தர் மண்டப பொன்விழா கொண்டாட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினர்.மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களையும் சந்தித்து நினைவு மண்டப படத்தை பரிசாக வழங்கினார்.

நமது நிருபர்.