கன்னியாகுமரி படகு போக்குவரத்து – கட்டணம் 50 சதவீதம் வரை உயர்வு.!

Scroll Down To Discover

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்குக்கு செல்லும் படகு போக்குவரத்து கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். மேலும், விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் கானப்படும்.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை காணவும், விவேகானந்தை நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்தும் மகிழ்வர். இந்த நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. சாதாரண கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.75ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200 ஆக இருந்த நிலையில், புதிய கட்டணமாக இன்று முதல் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.