கடைசி வாய்ப்பு – 20 ஆண்டுகளாக அரியர் முடிக்காதவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

Scroll Down To Discover

2001-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ மற்றும் பி.டெக் உள்ளிட்ட பொறியில் படிப்புகளை முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வெழுத இறுதி வாய்ப்பினை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே அளிக்கப்பட்ட கால அவகாசங்களைத் தவர விட்டவர்களுக்கு அரியர் வைத்திருக்கும் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பினை வழங்கியுள்ளது.வரும் ஏப்ரல், மே 2020 மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது, கடந்த 20 ஆண்டுகளில் அரியர் வைத்திருப்போர் தேர்வெழுத இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் [https:coe1annauniv.edu] என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.