கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மனு ஏற்க மறுப்பு.!

Scroll Down To Discover

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிற நிலையில், கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

அதன்படி காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணி என்பவர், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய சரியாக 2.59 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு வந்தவர் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றார்.

அப்போது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைய இறுதி நிமிடம் ஆனதை அடுத்து அவரது வேட்புமனுவை ஏற்க மதுரை மத்திய தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து, வேட்பாளர், அனைத்து ஆவணங்களையும் சரி செய்த பின்னர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வரும்படி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தினார். இதனையடுத்து, மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் மணி அவரது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

செய்தி: Ravi Chandran