இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை பயன்பாட்டுக்காக, விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் 11 கண்காணிப்பு ரேடார்களை கொள்முதல் செய்ய, மகிந்திரா டெலிபோனிக்ஸ் இன்டகரேட்டட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.
பொருட்களை வாங்கி தயாரிக்கும் பிரிவு’-ன் கீழ் இந்த கொள்முதல் ரூ.323.47 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இந்த ரேடார்களை பொருத்துவதன் மூலம் கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் விமான தளங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்.
https://twitter.com/ANI/status/1400399308604596225?s=20
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு சாதனை. தொழில்நுட்ப பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் உள்நாட்டு உற்பத்தி, மற்றும் வேலைவாய்ப்பை இந்த ஒப்பந்தம் அதிகரிக்கும்.
Leave your comments here...