இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை இந்திய – பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் மீட்டது.
பங்களாதேஷ் மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 19-20 ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
https://twitter.com/ANI/status/1562036959467282439?s=20&t=Z4Nn8hkIW0U1rV4zt9gcNg
இதனால் கடலில் தத்தளித்தவர்களில் 27 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை கப்பல் ’வரத்’ மீட்டது. 5 பேரை இந்திய மீனவர்கள் மீட்டனர். மீனவர்கள் 32 பேரையும் நல்லெண்ண அடிப்படையில் சர்வதேச எல்லையில், பங்களாதேஷ் கடலோரக் காவல் படை கப்பல் ‘தாஜுதீன்’ (பிஎல் -72) மூலம் பங்களாதேஷிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து கடலோரக் காவல் படை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
Leave your comments here...