கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது : வங்கி கணக்குகள் முடக்கம் – அதிரடி நடவடிக்கை எடுத்த குமரி போலீசார்..!!

Scroll Down To Discover

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.குறிப்பாக கஞ்சா கடத்தலை தடுக்க குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் அவர்களுக்கு இடலாகுடி பகுதியில் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்களுடன் சோதனைக்கு சென்றார். அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இடலாகுடி பகுதியை சேர்ந்த முகமது ஈர்பான்(20), முகமது சபிக் (21), அஸ்லாம் (25), முகமது முசரப் (20) மற்றும் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த விமல் (21) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தார்.

மேலும் அவர்களை சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்தப் பகுதியில் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பின் அவர்களிடமிருந்த 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

பின்பு அவர் மீது காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திருமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து, அரசிதழ் அதிகாரியுடன் அவர்களின் வீடுகளை சோதனை செய்தார். அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

: Tharnesh -H