கஞ்சா கடத்திய பெண் உட்பட 10 பேர் கைது : ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.!

Scroll Down To Discover

உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 10 பேரை சிறப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உசிலம்பட்டி பகுதியில் சிலர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உசிலம்பட்டி டவுன் போலீசார் ஒரு சிறப்பு படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.

உசிலம்பட்டி பகுதியில் வாகன சோதனையின்போது ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் மூட்டைக் கணக்கில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 240 கிலோ மதிப்புள்ள கஞ்சா மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் இப்பகுதியை சேர்ந்தபாக்யராஜ் (35) குமார் (41) சௌந்தரபாண்டி (38), இளங்கோவன் (32), ஜெயப்பிரகாஷ் (36), நரேஷ் (24) முத்துராஜ் (41), மேனகா (27) பாலமுருகன் (25), சுரேஷ் (44)உள்ளிட்ட பத்து பேரை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தி : ரவிசந்திரன்