கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

Scroll Down To Discover

உத்திரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று(டிச.,13) திறந்து வைத்தார்.

இதற்காக விமானம் மூலம் வாரணாசி சென்ற பிரதமர் மோடியை உத்திரப்பிரேதச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் படகில் சென்று, புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வளாகம் கங்கை நதி கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீ நீளமும், 20 மீ அகலமும் கொண்ட நடைபாதையாகும். இதன் பிறகு 339 கோடி ரூபாய் செலவில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ள கட்டுமான பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து மதிய உணவை பிரதமர் மோடி அருந்தினார்.
https://twitter.com/ANINewsUP/status/1470390864522317825?s=20
பின்னர் வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் விவேகானந்த் சொகுசு படகில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல் மந்திரிகளும் உடன் சென்றனர். இதையடுத்து, கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.