ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

Scroll Down To Discover

நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசினேன் என்றும் அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


மேலும் அவர் பேசியதாவது: மருத்துவ படிப்புக்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதத்தை இடஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னுரிமை மற்றும் மாநில இடஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவத்துறை கவுன்சில் அதிகாரிகள் உடைய குழு அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றம் தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.