ஓசூர் அடுத்த ஜூஜுவாடி சோதனைச்சாவடியில் 217 லிட்டர் கர்நாடக மதுபாட்டில்கள், இன்னோவா காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் BKஅரவிந்த் அவர்கள் உத்தரவின்பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமை காவலர் குணசீலன் ஆகியோர் சகிதம் ஜூஜூவாடி போலீஸ் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் என்பவர் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுமார் 217 லிட்டர் கர்நாடக மாநில மதுபானங்களை (மதிப்பு ரூபாய் 67,503/- ) வாங்கி தன்னுடைய TN 23 இன்னோவா காரில் கடத்தி வரும்போது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடமிருந்து இன்னோவா கார் மற்றும் அரசு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave your comments here...