ஓசூரில் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில் இன்று வெள்ளிக்கிழமை 17/06/2022 நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் ஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஜாகிர் ஆலம் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா கண்டன உரை நிகழ்த்தினார். உடன் தமுமுக ஊடகஅணி மாநில செயலாளர் அல்தாப் அஹமத் மற்றும் கழக நிர்வாகிகள் தோழமை கட்சி நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
A. MOHAMMED YOUNUS