ஒலிம்பிக் வீரர்களுக்கு சமைத்து பரிமாறிய பஞ்சாப் முதல்வர்.!

Scroll Down To Discover

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பஞ்சாப் மாநில வீரர்களுக்கு தானே உணவு சமைத்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பபரிமாறினார்.

பஞ்சாப் அரசு சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பஞ்சாப் மாநில வீரர்களுக்கு பாராட்டு மற்றும் விருந்தளிக்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை, முதல்வர் அமரீந்தர் சிங்கே சமைத்ததாக அம்மாநில அரசு தெரிவித்ததுடன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

இந்த விருந்தில், ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்