ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு : மூத்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை.!

Scroll Down To Discover

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பான சேவைக்காக மூத்த வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், நமது நாட்டை தீரத்துடன் பாதுகாக்கும் நமது சிறந்த வீரர்களின் நலனை உறுதி செய்வதற்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை இந்தியா எடுத்தது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது சிறப்பான நிகழ்வாகும்.


ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்துக்காக தசாப்தங்களாக இந்தியா காத்திருந்தது.மூத்த வீரர்களின் சிறப்பான சேவைக்காக அவர்களை நான் வணங்குகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.