ஒரு மணி நேரத்தில் 8747 ஸ்கிப்பிங் செய்து லிம்கா சாதனை செய்த வாலிபர்.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முன்னாள் மாணவர் ஐயப்பன்.
இவர் சிறுவயதில் இருந்தே சாதனை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு லிம்கா சாதனையில் இடம் பெற வேண்டி ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்து சாதனை புரிய வேண்டும் என முயற்சி செய்து கடந்த மூன்று ஆண்டுகள் இதற்க்காக பயிற்சி செய்து வந்துள்ளார்.

சாதனைக்காக இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் லிம்கா புத்தகத்தில் இடம் பெறுவதற்காக லிம்கா ரெக்கார்டு அதிகாரிகள் மத்தியில், ஒரு மணி நேரத்தில் 8747ஸ்கிப்பிங் ஒரே சீரான முறையில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

இளைஞர் ஐயப்பனின் சாதனையை இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் பாராட்டி பரிசு சான்றிதழ்கள் வழங்கினார். லிமக்கா ரெக்கார்டு புக் நடுவர்கள் அரவிந்தன். வினோத். ஜெய்பிரதா ஆகியோர் சாதனை பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்கள்.

செய்தி : RaviChandraN