ஒடிசாவில் புயலின்போது பிறந்த 2 குழந்தைகளுக்கு ‘குலாப்’ என்று பெயர்..!

Scroll Down To Discover

வங்க கடலில் உருவாகி ஆந்திராவில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த புயலுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இந்த பெயரை வழங்கியது பக்கத்து நாடான பாகிஸ்தான். ‘குலாப்’ என்றால் ‘ரோஜா’ என்று பொருள். பலத்த காற்று, கனமழை, நிலச்சரிவு என்று ஒடிசாவிலும் குலாப் புயல் தனது முத்திரைகளை பதித்துவிட்டுப் போனது.

அந்த நேரத்தில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 41 கர்ப்பிணிகள் பிரசவத்தில் குழந்தைகளை பெற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, அந்த தாய்களும், சேய்களும் நலமாக உள்ளனர்.

ஆனால் சுவாரசியமான விஷயம், கஞ்சம் மாவட்டத்தில் இரு வெவ்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகள் இருவர் பெற்றெடுத்த இரு பெண் குழந்தைகளுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டதுதான்.