ஒடிசாவில் புகழ்பெற்ற எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு..!

Scroll Down To Discover

ஒடிசாவில் புகழ்பெற்ற எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.  மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.புவிசார் குறியீடு அங்கீகாரமானது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.

எறும்பு சட்னி : ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு உணவு வகை இருக்கிறது. மயூர்பஞ்ச் என்ற மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது.Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகையினை இந்த  மலையில் வாழும் பழங்குடி மக்கள், இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். மேலும் இதை அருகில் உள்ள சந்தையிலும் விற்பனை செய்கின்றனர். மருத்துவ குணங்களால் சிறப்பு பெற்றது இந்த எறும்பு துவையல் என கூறப்படுகிறது.கை எறும்புகள் தங்கள் கூட்டின் அருகே வேறு உயிரினங்கள் வந்தால் வெட்டையாடிவிடும். இதன் காரணமாக இந்த எரும்பில் இருந்து கிடைக்கும் இரசாயனத்தை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.