ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – பெங்களூருவில் ஒருவர் கைது செய்த என்.ஐ.ஏ..!

Scroll Down To Discover

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கடந்த 2020ம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு முகமை போலீசார் பல்வேறு நகரங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், ரகசிய தகவலின்படி பெங்களூரு சென்ற தேசிய புலனாய்வு முகமை போலீசார், ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்தனர். இவர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்காக வாலிபர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் இருந்து துருக்கி வழியாக பல வாலிபர்களை சிரியாவுக்கு அனுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ஐ.எஸ். அமைப்பிற்கு நிதி திரட்டியதாக பெங்களூருவில் அரிசி வியாபாரி இர்பான் நசீர், தமிழகத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் அகமது அப்துல் காதர், மருத்துவர் முகமது துக்கீர் மெஹபூப் ஆகியோரை என்.ஐ.ஏ., போலீஸார் கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.