கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பையொட்டி மூன்று நாட்கள் திறக்கப்படுவது வழக்கம்.
இதன்படி மலையாளத்தில் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பான இன்று கோவில் திறக்கப்படுகிறது. கோவில் திறக்கும் தினத்தில் பூஜைகள் எதுவும் நடக்காது.
நாளை மறுநாள் முதல், 21ம் தேதி வரை, ‘ஆன்லைன்’ வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.புதிய மேல்சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் நாளை மறுதினம் நடக்கிறது. பந்தள அரண்மனையை சேர்ந்த 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இருவர் புதிய மேல்சாந்தியின் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
Leave your comments here...