சியாச்சின் பனிமலைப் பகுதிக்கு அருகில் உள்ள தெராம்ஷேரில் இருக்கும் இதுவரை யாரும் தொடாத ஐந்து சிகரங்களை ஒரே சமயத்தில் எட்டும் முயற்சியில் இந்திய ராணுவக் குழு ஈடுபட்டுள்ளது.
இதற்கான பயணத்தை 2021 ஆகஸ்ட் 9 அன்று சியாச்சின் முகாமிலிருந்து தீயணைப்பு மற்றும் இயற்கை சீற்ற படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆகாஷ் கௌஷிக் தொடங்கிவைத்தார்.
லடாக்கில் இருந்து கிளம்பிய இந்திய ராணுவத்தின் மலையேறும் குழு, அப்சரசாஸ் I, அப்சரசாஸ் II, அப்சரசாஸ் III, பிடி-6940 மற்றும் பிடி-7140 ஆகிய சிகரங்களை ஒரே சமயத்தில் தொட முயற்சிக்கும்.
சியாச்சின் முகாமில் இருந்த படைவீரர்கள் மற்றும் உள்ளூரில் வசிக்கும் இந்திய ராணுவ முன்னாள் வீரர்கள் மலையேறும் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Leave your comments here...