ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் ; 45 இடங்களில் வென்று 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்து பாஜக.!

Scroll Down To Discover

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச., 1ல் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டது.

சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் 56 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 75 இடங்களை பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பாஜக 49 இடங்களை பெற்றுள்ளது. கடந்த முறை தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்.ஐஎம் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.