எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தீவிரவாதி தாவூத் கைது..!

Scroll Down To Discover

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீவிரவாதிகள் தவுஃபீக், அப்துல் சமீம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது வருகிறது.


இந்நிலையில் ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தாவூத் என்ற தீவிரவாதியை காவல்துறை கைது செய்து உள்ளது.

ராமநாதபுரத்தில் மீனவர்கள் மத்தியில் பயங்கரவாதி ஒருவன் பதுங்கியிருக்கிறான் என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் போலீசார் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையிலிருந்த தாவூத் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது அவர் ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்றும், எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக் குற்றவாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.