எல்லை பாதுகாப்பு படையினருக்கு மதுரையில் கேன்டீன் தொடக்கம்

Scroll Down To Discover

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், எல்லை பாதுகாப்பு படை யில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்று உள்ளனர் இவர்களுக்காக அரசு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் வழங்கும் கேன்டீன், இது வரையிலும் மதுரையில் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால் இவர்கள் சென்னை, பெங்களூர் அல்லது திருவனந்தபுரம் சென்று தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மதுரை ஐயர் பங்களா டு கூடல் நகர் செல்லும் வழியில் பனங்காடி ரோட்டில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கேண்டினை முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களின் அமைப்பு தலைவர் சீனிவாசன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி திறந்து வைத்தார்.