ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடக்கிறது.இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிஸ்ராம்பூர் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
https://twitter.com/rajnathsingh/status/1198537421010243585?s=19
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஆரம்பம் முதலே பாஜக தெரிவித்து வந்ததாகவும், அக்கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும் தற்போது அனுமதி அளித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.ரபேல் போர் விமானங்கள் விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளன. நாம் இப்போது எல்லைகளை கடக்க தேவையில்லை. எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை குறிவைக்க நமது தேசத்தில் இருந்தே ரபேலைப் பயன்படுத்தலாம்.ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத், நாட்டில் 2 சட்டங்கள், 2 கொடிகள் இருக்கக் கூடாது என்ற பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை பாஜக நிறைவேற்றி விட்டதாக குறிப்பிட்டார்
Leave your comments here...