எம்.பி.க்கள் மீது வழக்குகள் – முதலிடத்தை பிடித்த தமிழகம்..!!

Scroll Down To Discover

லோக்சபா எம்.பி.,க்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கண்காணித்து வருபவர் சபாநாயகர் ஓம் பிர்லா

எந்த ஒரு எம்.பி., மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ உடனடியாக சபாநாயகருக்கு தெரிவித்தாக வேண்டும்.சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி உடனடியாக எம்.பி., கைது தொடர்பாக சபாநாயகருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும். இந்த மாத பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகம் தான். தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது எம்.பி.,க்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஓம் பிர்லாவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலுார், திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி.,க்கள் மீதான வழக்குகள் ஓம் பிர்லாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அமலாக்கத் துறையில் தமிழக எம்.பி.,க்கள் சிலர் சிக்கியுள்ள தகவலும் சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.