எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் மோடியே மீண்டும் பிரதமர் – அமித்ஷா உறுதி

Scroll Down To Discover

எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் ” என லோக்சபாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.

டில்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மீது விளக்கமளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:டில்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பா சுப்ரீம் கோர்ட் அளித்த அறிவுரையின்படி இந்த மசோதா உருவாக்கப்பட்டது. யூனியன் அரசு தொடர்பான சட்டங்களை இயற்ற பார்லி.,க்கு உரிமை உண்டு. மக்கள் நல பணியில் டில்லி அரசுக்கு அக்கறை இல்லை. இங்குள்ள அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது .

ஊழலை மறைக்க அரசியல் நாடகம் ஆடுகின்றனர். ஊழல் செய்பவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். எத்தனை கூட்டணி அமைத்தாலும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் . இது உறுதி என்றார்.இவரது பேச்சின் போது எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.