ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளன இதில் ,தற்போது 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .

இந்த நிலையில், புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற செயலாளரை திட்டி பொய்யான புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.