ஊராட்சியில் நாடக மேடை : கட்டிட வேலை பணி செய்யவிடாமல் ஊராட்சி மன்றத் தலைவர் தடுப்பதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தாட்கோ காலனி பகுதியில் நாடக மேடை அமைத்துக் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்இடம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கொடுத்ததன் பேரில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து மாணிக்கம் எம்எல்ஏ, நாடக மேடை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளார்.

இதற்கான பூமி பூஜைசமீபத்தில் நடந்தது தற்போது நாடகமேடை கட்டுவதற்கான பூர்வாங்க வேலை ஜேசிபி மூலம் நடைபெற்றது. அப்போது காடுபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாடக மேடையை கட்டுவதற்கு முன்னால் அதற்கான இடத்தை அளந்து கட்டுங்கள் என்று கூறியதாகவும் இதனால் நாடக மேடை வேலை தடை பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் காடுபட்டி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன் உட்பட மூன்று பேர் மீது புகார் கொடுத்தனர் . இதன் பேரில், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை செய்து வருகிறார்.