உள்ளூர் மொழி தெரியாத நபர்களுக்கு வாடிக்கையளர்களுடன் நேரடி தொடர்பு உள்ள பணிகளை வழங்கக் கூடாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 75ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நம் நாட்டின் பன்முகத்தன்மையின் காரணமாக சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த நபரை வேலைக்கு எடுங்கள்.
பிராந்திய மொழியில் பேசாத ஊழியர்கள், “நீ இந்தி பேசவில்லை என்றால் நீ இந்தியனே இல்லை” என்று சொல்லும் அளவுக்குத் தேசபக்தி உள்ள ஊழியர்கள் இருப்பது எல்லாம் எனக்குச் சரியாகப் படவில்லை. அவர்கள் உங்கள் வணிகத்திற்கு உதவ மாட்டார்கள். கிளைகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களை முறையாகப் பணி அமர்த்துங்கள். உள்ளூர் மொழி தெரியாத நபர்களுக்கு வாடிக்கையளர்களுடன் நேரடி தொடர்பு உள்ள பணிகளை வழங்கக் கூடாது. நேர்மறையான முறையில் நாம் வாடிக்கையாளர்களை அணுக வேண்டும். அவர்களுக்கு சேவை செய்யவே வங்கிகள் உள்ளன. வங்கிகள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தேவையானதைச் செய்து தர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Leave your comments here...