உலகின் போற்றுதலுக்கு உரியோர் பட்டியல் : பிரதமர் மோடிக்கு 8ம் இடம்..!

Scroll Down To Discover

2021-ஆம் ஆண்டிற்கான உலகின் போற்றுதலுக்கு உரியோர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார்.

லண்டனை சேர்ந்த YouGov என்ற ஆய்வு நிறுவனம், 2021ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் போற்றுதலுக்குரிய ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obama முதலிடத்தில் உள்ளார். ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன அதிபர் Bill Gates, சீன அதிபர் Xi Jinping, Cristiano Ronaldo, Jackie Chan ஆகியோர் முறையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோரை பின்னுக்குத்தள்ளி பிரதமர் திரு. நரேந்திர மோடி 8-ம் இடத்தைப் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இதேபோல், பெருமைக்குரிய பெண்கள் பட்டியலில் மூன்றாம் முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் முதலிடத்தில் உள்ளார். 10ம் இடத்தை இந்தியாவை சேர்ந்த நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.