2021ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் டில்லி 62வது இடம்

Scroll Down To Discover

இந்தியாவின் டெல்லி நகரம் 2021ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் 62வது இடம் பிடித்துள்ளது.

கனடாவை தலைமையிடமாக கொண்ட ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடட் நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 2021ம் ஆண்டின் சிறந்த நகரங்களின் தரவரிசையானது, இடத்தின் தரம், நற்பெயர் மற்றும் முக்கியத்துவம் பெற்ற அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலான போட்டிக்கான அடையாளம் கொண்ட உலகளாவிய நகரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவின் டில்லி 62வது இடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதிலும் சிறந்த 100 நகரங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் டில்லி மட்டுமே. கடந்தாண்டு இந்த பட்டியலில் 81வது இடத்தில் டில்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தவிர்த்து இந்த பட்டியலில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட நகரங்களும், இத்தாலியின் ரோம் நகரமும், அபுதாபி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், பிரேக், டொரோண்டோ போன்ற நகரங்ளும் இடம் பெற்று உள்ளன.இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் லண்டன், நியூயார்க், பாரீஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.