உலகம் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் – உலக இந்து மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Scroll Down To Discover

மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் என்று உலகம் நம்புகிறது. பாரதத்தில் அதற்கான பாரம்பரியம் உள்ளது  என்று மக்கள் நம்புவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ‘உலக இந்து காங்கிரஸ் 2023′ என்ற நிகழ்ச்சி நவம்பர் 24 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. 2,000 ஆண்டுகளாக மகிழ்ச்சி, பேரின்பம், அமைதியைக் கொண்டுவர மனிதர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர். பொருள்முதல்வாதம், கம்யூனிசம், முதலாளித்துவத்தையும் முயற்சி செய்து பார்த்தனர். பல்வேறு மதங்களை வழிபட்டனர். அவர்கள் பொருட்களின் செழிப்பை அனுபவித்தனர். ஆனால் திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லை.

இப்போது, குறிப்பாக கோவிட் காலத்திற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் சிந்திக்கின்றனர். மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் என்று உலகம் நம்புகிறது. பாரதத்தில் அதற்கான பாரம்பரியம் உள்ளது. பாரதம் இதை முன்னரே செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.