குடியரசுத் தலைவர் மாளிகையில், தர்ம சக்கர தினம் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்து உரையாற்றிய நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புத்தமதக் கூட்டமைப்பு ஜுலை 4, 2020 அன்று அசதா பௌர்ணமியை தர்மசக்கரா தினமாகக் கொண்டாடுகிறது. உத்தரப்பிரதேசத்தின் வாராணாசிக்கு அருகில் உள்ள தற்போது சாரநாத் என்று அழைக்கப்படும் ரிசிபட்டனாவில் அமைந்துள்ள மான் பூங்காவில் தனது முதல் 5 சீடர்களுக்கு புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்த நாளாக இந்தப் பௌர்ணமி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை உலகமெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் தர்ம சக்கரா பர்வட்டனா அல்லது தர்ம சக்கர உபதேச தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தை புத்த மதத்தினர் மற்றும் இந்துக்கள் என இருவருமே குரு பூர்ணிமா என்று தங்களின் குருக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கொண்டாடுகின்றனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி :- அதில், உலகம் இன்று அசாதரணமான சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறினார். இத்தகைய சவால்களுக்கு புத்தரின் போதனைகளே தீர்வாக இருக்கும் என அவர் கூறினார். புத்தரின் போதனைகள் முக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை எனவும் அவர் கூறினார். உலகளாவிய பிரச்னைகளுக்கு பிரகாசமான இளம் மனங்களே தீர்வு காண்கின்றன. 21ம் நூற்றாண்டு குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.இந்த நம்பிக்கை நமது இளம் நண்பர்களிடமிருந்து வருகிறது. நம்பிக்கை, புதுமை, இரக்கம் ஆகியவை துன்பத்தை எவ்வாறு அகற்றும் என்பதற்கு சிறந்த உதாரணத்தை காண விரும்பினால் அது இளைஞர்கள் தலைமையிலான எங்கள் ஸ்டார்ட் அப் துறை தான்.
https://twitter.com/narendramodi/status/1279303131193458693?s=20
இந்தியா மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பை கொண்டது. புத்தரின் எண்ணங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க இளைஞர்களை வலியுறுத்துவேன் அத்தகைய எண்ணங்கள் ஊக்கம் & முன்னோக்கி செல்வதற்கான வழியைக் காண்பிக்கும்.இன்று உலகம் அசாதாரணமான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சவால்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான தீர்வை புத்த பிரானின் கொள்கைகள் தரக்கூடும்.
அவை நேற்றும் இன்றும் ஏன் நாளையும் கூட பொருத்தமானதாக இருக்கும்.எளிமையை தமது வாழ்வின் மூலம் போதித்த புத்தரின் போதனைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
Leave your comments here...