உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

உறவினர்கள் யாரும் இறந்த நபரை தேடி வராத காரணத்தால் மேலூர் காவல் நிலைய காவலர் சிவா, தானாக முன்வந்து அவரின் உடலை நல்ல முறையில் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.