உத்தர பிரதேசத்தில் “லவ் ஜிகாத்திற்கு” எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க அமைச்சரவை ஒப்புதல்.!

Scroll Down To Discover

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் காதல் வலையில் விழவைத்து அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக உத்தரபிரதேசம், மத்திய பிர தேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே அறிவித்தார். இது தொடர்பாக அவசர சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதன்படி, மாநில சட்டக் கமிஷன் புதிய மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பியது.

இதன் அடிப்படையில் மாநில அரசு கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த அவசர சட்டத்துக்கு உ.பி. அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது.அவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க, இந்த சட்டம் வகை செய்யும்.