உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்.!

Scroll Down To Discover

உத்தராகண்ட்: பாதாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர். புதுடெல்லி, உத்தரகாண்ட் அருகே உள்ள குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். விரைவில் விசாரணை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி வரை இருக்கலாம் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் டிஜிசிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் என உத்தரகண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்துள்ளேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன என்று பதிவிட்டுள்ளார்