உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு : நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகள் மீது சரமாரி அடி உதை..!

Scroll Down To Discover

நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கொலையில் தொடர்புடையே மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 குற்றவாளிகளும் இன்று ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 12ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நான்கு குற்றவாளிகளும் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த வாகனத்தில் ஏற்றுவற்கு அழைத்து வரப்பட்ட போது, அங்கு காத்திருந்த வழக்கறிஞர்கள் உள்பட பொதுமக்கள் ஆவேசத்துடன் நான்கு பேரையும் அடித்து உதைத்தனர்.
https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1543197271688626176?s=20&t=E24ltEY5GaL3TCi30KQKfw
இதில் ஒரு குற்றவாளியின் ஆடைகள் கிழிந்தன. நான்கு பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும், பாகிஸ்தான் ஒழிக என்றும் வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். உடனடியாக போலீசார் நான்கு பேரையும் மீட்டு வாகனத்தில் அழைத்து சென்றனர். குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.