உடும்பை வேட்டையாடி நாகர்கோவிலில் விற்க முயன்ற இருவர் அதிரடியாக கைது..!

Scroll Down To Discover

கன்னியாகுமரி நெல்லை மாவட்டத்தை ஒட்டிய காட்டில் உடும்பு வேட்டையில் ஈடுபட்டு அதனை நாகர்கோவிலில் விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையும் மாவட்டத்திற்குட்பட்ட பணகுடி மலையில் 3 வாலிபர்கள் உடும்பு வேட்டையாடி அதனை நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் விற்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தவுடன் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபன், வனவர் பிரசன்னா கணேஷ் மகாராஜா சக்திவேல், மற்றும் வன ஊழியர்கள் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நாகர்கோவில் பள்ளிவிலை ரயில்வே டிராக்கில் அந்த மூன்று பேரும் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க சென்றபோது, பண குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(38) சகாய ஜோஸ் மைக்கேல்ராஜ்(32) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர், ரீகன் (35) என்பவர் தப்பி ஓடிவிட்டார், தப்பி ஓடும்போது அவர் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை வனத்துறையினர் கைப்பற்றினர் .

இதனையெடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.