ஈஷா யோகா மைய வளாகத்தை, ‘கொரோனா’ சிகிச்சை மையமாக, தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் – சத்குரு அறிவிப்பு

Scroll Down To Discover

கொரோனா’ பாதிப்பை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை, ‘கொரோனா’ ஒழிப்பு பணியில் மக்களுக்கு சேவையாற்ற முன்வந்துள்ளது.

‘ஈஷா’அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளதாவது:- இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில் வேலையின்மை காரணமாக, பசி, பட்டினியால் வாடுவோருக்கு, தங்களால் இயன்ற அளவுக்கு உணவளித்து உதவ வேண்டும். இந்த இக்கட்டான சூழலில், ஒவ்வொரு குடிமக்களும், தனிநபராக, நம்மால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை. தமிழகத்தில் ‘கொரோனா’ பாதிப்புக்கு, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தை, தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.