ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை : வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈஷா யோகா மையம் விளக்கம்

Scroll Down To Discover

கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த நிகழ்வுகளிலும் வெளிநாட்டினர் பலர் பங்கேற்றிருந்தனர். அங்கும் கொரொனா பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அங்கும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இன்று காலை சென்னையில் பேட்டியளித்த முதல்வர் பழனிச்சாமி, கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஈஷா யோகா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், ஈஷா யோகா மையம் மீது வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள இம்மையம், பிப்ரவரியில் மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை பார்வையிட்டு சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளது